Home செய்திகள் மண்டபம், வேதாளை பகுதி வீடுகளில் 3 நாளில் பதுக்கிய 4,275 கிலோ மஞ்சள், 650 கிலோ சுறா பீலி, 150 கிலோ கடல் அட்டை பறிமுதல்.

மண்டபம், வேதாளை பகுதி வீடுகளில் 3 நாளில் பதுக்கிய 4,275 கிலோ மஞ்சள், 650 கிலோ சுறா பீலி, 150 கிலோ கடல் அட்டை பறிமுதல்.

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ஜன.1ல் தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில், வேதாளை தெற்கு தெரு சதாம்என்பவர் வீட்டில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது. அதன்படி, கியூ பிரிவு, மண்டபம் போலீசார், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு, வனத்துறை இணைந்து சோதனை செய்தனர். அப்போது 3 சாக்கு மூடையில் பதப்படுத்திய 150கிலோ கடல் அட்டை, 30 மூடைகளில் 1,500 கிலோ மஞ்சள், 650 கிலோ சுறா பீலி ஆகியவற்றை ராமேஸ்வரம் காவல் உதவி எஸ்பி தீபக் சிவாஜ் தலைமையில் பறிமுதல் செய்தனர். 150 கிலோ கடல் அட்டை, 650 கிலோசுறா பீலி ஆகியவற்றை வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பினர். 1500 கிலோமஞ்சள் மூடைகள் மண்டபம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சதாமை போலீசார் தேடி வருகின்றனர்.மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு அலி ஜின்னாஎன்பவருக்கு சொந்தமான காலியிடத்தில் உள்ள தகர கொட்டகையில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக ஜன.2ல் தகவல் கிடைத்தது. இதன்படி மண்டபம் கியூ பிரிவு தலைமை காவலர்கள் நாராயணன், சுந்தரமூர்த்தி மண்டபம் தனிப் பிரிவு தலைமைக் காவலர் கேசவன் ஆகியோர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 25 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 875 கிலோ மஞ்சள் இருந்ததை கைப்பற்றினர். மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.மண்டபம் அருகேவேதாளை வடக்கு தெரு முகமது புகாரி மைதீன்பிச்சை,வேதாளைமண்டபம் மேற்கு சதாம்ஆகியோரது வீடுகளில்இலங்கைக்கு கடத்த வாங்கி வைத்திருப்பதாக நேற்று ( ஜன.3) தகவல் கிடைத்தது. இதன்படி மண்டபம் காவல் தனிப்பிரிவு தலைமை காவலர் கேசவன் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,கியூ பிரிவு தலைமை காவலர் இளங்கோ ஆகியோர் இணைந்து சோதனை செய்தனர். அங்கு 6 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 105 பீடி இலை கட்டுகள் மற்றும் 38 சாக்கு மூடையில் சுமார் 1,900 கிலோ மஞ்சளை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!