Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு இணையவழி கருத்தரங்கம்; மாணவ மாணவிகள் பங்கேற்பு..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு இணையவழி கருத்தரங்கம்; மாணவ மாணவிகள் பங்கேற்பு..

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் கட்டப்பொம்மன் போல் உடையணிந்து உரையாற்றினர். இக்கருத்தரங்கில் கலை ஆசிரியை சொர்ணம் வரவேற்புரை ஆற்றினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை உரை ஆற்றினார். சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியின் வரலாற்று ஆசிரியர் அன்பழகன் முன்னிலை உரை ஆற்றினார். இந்த சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பிரதிமணன் முத்து, ஹரிஹரசுதன், முத்துமகராசு,துவாரகா கிரிஷ் ஆகியோர் கட்டபொம்மன் போல் உடை அணிந்து வந்து கட்டபொம்மன் பற்றி உரை நிகழ்த்தினர். மாணவிகள் தங்கமலர், முகுந்தனா, அக்ஷயா, சூடாமணி ஆகியோர் வேலுநாச்சியார் பற்றி உரை நிகழ்த்தினர். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் இணையம் வழியாக அனுப்பப்பட்டன என்கிற தகவலை மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!