Home செய்திகள் தமிழக அரசு அறிவித்த பத்திரிக்கையாளர் நல வாரியம் உடனடியாக அமைக்க -டியுஜே பேரவை வலியுறுத்தல்.

தமிழக அரசு அறிவித்த பத்திரிக்கையாளர் நல வாரியம் உடனடியாக அமைக்க -டியுஜே பேரவை வலியுறுத்தல்.

by mohan

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின்சார்பில் மறைந்த இரண்டு பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தலா 1.5 லட்சம்நிதி உதவியினை மாநிலத் தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின்மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவரும் மாநில பொருளாளருமான வந்தவாசிரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில மற்றும் மாவட்டபொதுச்செயலாளர் போளூர் சுரேஷ், மாவட்ட செயலாளர் தனஞ்செயன், மாவட்டபொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசிய கவுன்சில் உறுப்பினர் சேது அனைவரையும் வரவேற்றார்.மறைந்த செய்தியாளர்கள் போளூர் மாலை முரசு செய்தியாளர் கே. பார்த்தசாரதிமற்றும் ஆரணி மக்கள் குரல் செய்தியாளர்ஆர்.சுரேஷ்ராஜாஆகியோர்படத்தைதிறந்துவைத்தும்மறைந்தசெய்தியாளர்கள் குடும்பத்திற்கு தலா 1.5 லட்சம்நிதி உதவியினை வழங்கியும் மாநிலத் தலைவர்பிஎஸ்டிபுருஷோத்தமன் சிறப்புரைஆற்றினார்.ஆரணி டெல்லி மோகன் மற்றும் வந்தவாசி சங்கர் ஆகியோருக்கு மருத்துவ நல நிதிஉதவியாக தலா ரூ. 5000 மாவட்ட சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. 10 மற்றும்12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பத்திரிக்கையாளர்களின் பிள்ளைகளுக்குகல்வி ஊக்கத் தொகையாக தலா ரூ. 1000 பதினைந்து பேருக்கு வழங்கப்பட்டது.மாநில துணைத் தலைவர் சண்முகவேல், மாநில அமைப்புச் செயலாளர் பி.ஆர்.சுப்பிரமணியன் மாநில இணைச் செயலாளர் கே. மணிவாசகம் ஆகியோர் கருத்துரைவழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்டதலைவர் முருககனி, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் மற்றும்மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர், லிங்கப்பன், மாவட்ட துணைத்தலைவர்கள் வி.எஸ். பாபு, வேணுகோபால், வி.வெங்கடேசன், மாவட்ட துணைசெயலாளர்கள் சாலமன், விஜயகுமார், ராமதாஸ், மாவட்ட இணை செயலாளர்கள் கே.பி.சேகர், பாண்டியன், சிவசங்கரன், மக்கள் தொடர்பு நிர்வாகி ஏழுமலை ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.கூட்டத்தில் மறைந்த செய்தியாளர்கள் பார்த்தசாரதி, சுரேஷ் ராஜா மற்றும்மாநில தலைவரின் தாயார் திருமதி. மனோன்மணி ஆகியோர் மறைவிற்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது.பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழகமுதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நலவாரியம் உடனடியாகஅமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.ஓயவூதியத்திற்கு ஏற்கனவே பலரும் விண்ணப்பித்து இருப்பதால் ஓயவூதிய கமிட்டி தொடர இக்கூட்டம் வலியுறுத்துகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், கீழ்பென்னாத்தூர்,கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருக்கும்செய்தியாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவை உடனடியாக வழங்க இக்கூட்டம்வலியுறுத்துகிறது.தாலுக்கா அளவில் நடக்கும் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான தகவல்களைஅனுப்ப செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.இந்நிகழ்வுகளை செய்தி சேகரிக்க வாகன வசதி செய்து தருமாறும் இக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது.தாலுக்கா செய்தியாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ்-அப் குழுவினை உருவாக்க செய்திமக்கள் தொடர்பு அலுவலரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயற்குழு உறுப்பினர்கள் செங்கம் ராஜா, செய்யாறு புருஷோத்தமன், வந்தவாசிகாஜா ஷெரிப், சேத்துப்பட்டு பிரேம்குமார், வெம்பாக்கம் இனாயதுல்லா,கீழ்பென்னாத்தூர் ரவிக்குமார், கலசபாக்கம் சரவணன், கண்ணமங்கலம்செந்தமிழ்ச்செல்வன், தண்டராம்பட்டு வேல்முருகன், வேட்டவலம்முத்துகிருஷ்ணன் மற்றும் தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் திருவண்ணாமலைராமகிருஷ்ணன், போளூர் ராஜேஷ்குமார், செங்கம் சரவணன், செய்யாறு சண்முகம்,கீழ்பென்னாத்தூர் கதிரவன், சேத்துப்பட்டு சேகர், வேட்டவலம் சாமிநாதன்,கண்ணமங்கலம் சாந்தசீலன், தண்டராம்பட்டு செல்வராஜ், கலசப்பாக்கம் பூபாலன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாவட்ட துணை செயலாளர்முத்தையன் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!