Home செய்திகள் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் கண்மாய்க்கு நீர் வேண்டி சாலை மறியல் .

நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் கண்மாய்க்கு நீர் வேண்டி சாலை மறியல் .

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் அருகே  மன்னவராதி கண்மாய் உள்ளது  . இந்த கண்மாய் நம்பி சுமார் 8 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அதிக அளவு மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற பல்வேறு வகையான பூக்கள் மற்றும் கொய்யா .சப்போட்டா போன்ற பல்வேறு பழங்கள் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 வருடங்களாக போதிய மழை இல்லாததால் நிலக்கோட்டை பகுதி முழுவதும் உள்ள  குளம், கண்மாய் போன்ற பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருவதால்  நிலக்கோட்டை பகுதியில் உள்ள   கண்மாய் மற்றும் குளங்கள் தண்ணீரை நிரப்புவதற்கு விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் சந்தித்து கோரிக்கை  வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு குளங்கள் நிரம்பின. ஆனால் சிலுக்குவார்பட்டி அருகே உள்ள மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரும் வழியில் பல்வேறு நபர்கள் கரையை உடைத்து தண்ணீரை திறந்து விடுவதாகவும் இதன் காரணமாக தற்போது வரை மன்னவராதி  கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் கடந்த 30 நாட்களாக பொதுப்பணித்துறையினர் மன்னவராதி   கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  ராஜவாய்க்கால் மூலமாக வரும்  தண்ணீரை தற்போது ஒரு பகுதியான சீத்தாபுரம், பாப்பன்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளுக்கு தற்போது மழை பெய்தது தொடர்ந்து  அதிகாரிகள் திறந்து விட்டனர். இதை அறிந்த சிலுக்குவார் பட்டி கிராம பொதுமக்களும், விவசாயிகளும் திடீரென 1000 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மன்னவராதி கண்மாய்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து சிலுக்குவார்பட்டியில் மதுரை – நிலக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கண்மாய்க்கு வரக்கூடிய தண்ணீரை திறந்து விட வேண்டும் எனவும், கண்மாய்க்கு வரும் வழியில் உள்ள கரைகளை யாரும் உடைக்காத வண்ணம் தண்ணீர் கொண்டு வந்து தர வேண்டும், கரைகளை உடைத்து மர்ம நபர்கள் மீது  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்மாய்க்கு தண்ணீர் வந்தால் பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் தண்ணீர் ஊற்று அதிகரிக்கும். ஆகவே உடனடியாக அரசு அதிகாரிகள் தலையிட்டு கண்மாய்க்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனக்கூறி மதுரை பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிலுக்குவார்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட 8 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகளும் பொதுமக்களும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ரஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!