Home செய்திகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக தீர்வு கண்டு அரசு நடத்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கோரிக்கை.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக தீர்வு கண்டு அரசு நடத்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கோரிக்கை.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில்மதுரை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மதுரை மாநகராட்சியில் உள்ள இருபத்தி ஒன்பது வார்டுகளுக்கு கடந்த 8 மாதங்களாக எந்த வித பணியும் நடைபெறவில்லை என கூறி வரும் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மதுரை பெருமாள் கோயில் அருகில் டி எம் கோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறதுசெய்தியாளர்களை சந்தித்த ராஜன்செல்லப்பா கூறும்போதுமதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த எட்டு மாதங்களாக எந்தவித பணியும் செய்யவில்லைபாதாளச் சாக்கடை மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் போன்றவற்றில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை ஆகையால் உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொது மக்கள் அடிப்படை பிரச்சினையில் கானா வேண்டும் என வலியுறுத்தி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் பெருமாள் கோவில் அருகிலுள்ள அடிஎம் கூட்டு அருகே வரும் நாலாம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்புதிதாக ஆட்சி அமைத்த அரசு சென்னைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது மதுரைக்கு எந்தவித பணிகளும் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை ஆகையால் அரசின் கவனத்தைக் கொண்டு வரவே இந்த ஆர்ப்பாட்டம்விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியை துரிதமாக செய்ய வேண்டும் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்உள்ள நிர்வாக சீர்கேட்டின் சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் மோடி வரும் நாளன்று விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத் தலைவர் என்ற முறையில் நான் பிரதமர் அவர்களிடம் மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமான நிலைய குறித்து கோரிக்கை அளிக்க உள்ளேன்மேலும் எனது தொகுதிக்கு கீழ்வரும் அவனியாபுரம் பகுதியில் தை மாதம் முதல் நாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது மதுரையில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு களில் அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடுபகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறிப்பிடத்தக்கது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நான் மேயராக இருந்த பொழுது அரசே ஏற்று நடத்த ஏற்பாடு செய்தேன் அதுபோல் நிரந்தர வாடிவாசல் அமைக்கும் திட்டம் தீட்டி அரசிடம் அளித்தனர் ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் தற்பொழுது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் கிராம கமிட்டி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது அரசு இதனை சீக்கிரமாக பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் சில ஆண்டுகள் தென்கால் பாசன விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி னர் இரு தரப்பையும் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் கிராம கமிட்டி ஜல்லிக்கட்டு நடத்தவோ அல்லது அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் குறுகிய காலங்களில் அது இன்னும் 12 நாட்களே உள்ள சூழ்நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என அழைக்கழிக்கப்படுவார்கள் இதுஇதுபோன்ற குளறுபடியை தவிர்க்க அரசு உடனடியாக தலையிட்டு விரைவாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என செல்லப்பா எம்எல்ஏ கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!