Home செய்திகள் பாதை இன்றி பரிதவிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை.

பாதை இன்றி பரிதவிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை.

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பஸ் ஸ்டாண்டின் பின்புறம் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனை. 1954ல் சிறிய அளவில் கட்டப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்தது. அதன்பின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தினமும் வெளி நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளியாக ஆண் பெண் இருபாலரும் தங்கி சிகிச்சை பெற 2-வார்டு களும் அதில் 40 படுக்கைகளும் உள்ளன மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு தனி வார்டு உள்ளது. இது தவிர இங்கு வெளிநோயாளிகள் பிரிவு எக்ஸ் ரே பிரிவு ரத்தப் பரிசோதனை நிலையம் பிரஷர் சுகர் இசிஜி பார்ப்பதற்கு தனிஅறை கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காக ஸ்கேன் அனற பல் மருத்துவம் பார்ப்பதற்கு அனைத்து உபகரணங்களும் கூடிய தனியறை தலைமை மருத்துவர் தனிஅறை மற்றும் இங்கு பணியாற்றும் மருத்துவர் அமர்ந்து வெளிநோயாளிகள் பார்ப்பதற்கு தனித்தனி அறைகள் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஊசி போடுவதற்கு தனி அறை காசநோய்க்கு சிகிச்சை பெற தனி அறை வார்டில் இருக்கும் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களுக்கு தங்குவதற்கு தனி கட்டிடம் ஆக்சிஜன் பிளான்ட் பிரசவ வார்டு மருந்துகள் காப்பகம் அலுவலகம் பிறப்பு பதிவுச் சான்றிதழ் வழங்க தனி அறை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்க தனி அறை மற்றும் சித்த மருத்துவத்திக்கு என சகல வசதியும் உள்ளது . இத்தனை வசதிகள் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினம்தோறும் சிகிச்சை பெற்று வரும் இந்த ஆஸ்பத்திரிக்கு பிரத்தியேகமாக பாதை கிடையாது பஸ் ஸ்டாண்ட் உள்நுழைந்து தான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். இந்த பஸ் ஸ்டாண்டில் தினமும் பல நூறு பஸ்கள் வந்து நின்று செல்வதால் நோயாளிகளை கொண்டு செல்லும் வாகனம் எதுவாக இருந்தாலும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களின் உடைய நிறைந்து போராடித்தான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் .இந்த ஆஸ்பத்திரியை கட்டுவதற்கு நிலம் தானமாக கொடுத்தவர்களுடன் வேறு சிலரும் பாதைக்காக இடம் தானமாக கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த இடத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்து கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டது அந்தக் கட்டிடம் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. அதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் தான் 15 ஆண்டுகள் முடிந்த உடன் அது இடித்துவிட்டு பாதை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அதில் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தற்பொழுது அந்த இடத்தில் கடந்த ஆட்சியில் நவீன முறையில் கட்டடங்களை கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர் . அதனால் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் ஆரம்பத்தில் இருந்து ஒரு 15 அடி அகலத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழி என எழுதி பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் பாதை கொடுத்துள்ளனர். ஆனால் இங்கு வரும் பஸ் ஓட்டுனர்கள் யாரும் அதை மதிப்பதே இல்லை. அவர்கள் வசதிக்கு எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கேயே நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் அடிக்கடி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. இலவச ஆம்புலன்ஸ் வசதி அமரர் ஊர்தி வசதி தாய்சேய் நல ஊர்தி வசதி நடமாடும் மருந்தக வசதி என அனைத்தையும் கொண்ட இந்த அரசு ஆஸ்பத்திரி கான வாகனங்கள் செல்லும்போதெல்லாம் இடையூறு ஏற்படுகிறது. நோயாளிகளின் அவசர சிகிச்சை நிலையை புரிந்துகொண்டு பேரூராட்சி நிர்வாகம் ஆஸ்பத்திரிக்கு என ஒரு தனி வழியை இடையூறும் இல்லாமல் வாகனங்கள் சென்று வரும் விதத்தில் அமைத்துத் தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!