Home செய்திகள் மதுரையில் குழாய் பதிபதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பயணிகள் அவதி.

மதுரையில் குழாய் பதிபதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பயணிகள் அவதி.

by mohan

மதுரை மாடக் குளத்திலிருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு முதல் ட்ரிப் காலை 5.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்ராஹார பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து திடீரென சாலையில் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தொண்டு பட்டிருந்தார் பள்ளத்தில் விழுந்து சிக்கியது. இதில் சுமார் 30 பயணிகள் பயணித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது அதிர்ச்சி அடைந்த பெண் பயணிகள் உடனடியாக வெளியே வந்தனர்இதனை தொடர்ந்து பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவராததால் பாதுகாப்பு காரணங்களால் பயணிகளை பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கிவிட்டனர்.இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று பேருந்திற்க்காக நீண்டதூரம் பேருந்து கிடைக்காமல் நடந்தே சென்றுள்ளனர்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் ஆங்காங்கு நடைபெற்று அதற்காக தொண்டபடும் பள்ளத்தை சரிவர மூடாமல் மாநகராட்சி ஊழியர்கள் சென்று விடுவதால் இது போன்று அடிக்கடி வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து சிக்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இருக்கும் காபி கொடுத்து அவர்களை வாகனம் வரும் வரை அமர செய்தார்கள்

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!