Home செய்திகள் ரேசன் அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி.

ரேசன் அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி.

by mohan

 மதுரை மாவட்டத்தில், சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ. பாஸ்கரன், உத்தரவிட்டுள்ளார்கள்.மேலும், மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்கள்.அதனடிப்படையில், மாவட்ட தனிப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், மதுரை கல்மேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சேகர் மகன் ஸ்ரீநாத் என்பவர் சட்டவிரோதமாக தனக்குச் சொந்தமான ரைஸ்மில்லில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சோதனையிட்ட போது சுமார் 80 டன் அளவிற்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இது குறித்த தகவல் கிடைத்தவுடன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர், மேற்படி சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் பிரிவினருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் ,மதுரை மாவட்டத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்க கூடிய ரேஷன் அரிசி களை யாரேனும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!