Home செய்திகள் நெல்பேட்டை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து போலீசார் ஒருவர் பலி.

நெல்பேட்டை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து போலீசார் ஒருவர் பலி.

by mohan

மதுரை வெங்காய மண்டி, தயிர் மார்க்கெட் மற்றும் அதிகமான லாரி பார்சல் சர்வீஸ் இருப்பதால் லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவதுமாகவும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருக்கும் இங்கு காவலர்கள் இருவரும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடை கட்டிடத்தின் முதல் மாடி தடுப்பு சுவர் திடீரென அருகே நின்றிருந்த இருவர்கள் மீதும் விழுந்தது.இடிபாடுகளில் சிக்கிய இருவரின் அலறல் சத்தம் கேட்டுஅருகில் இருந்தவர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கண்ணன் சரவணன் ஆகிய இருவரையும் மீட்டனர்.தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில்தலைமை காவலர் மதுரை மாவட்டம் சோழவந்தான் சேர்ந்த தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இவருக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தையும், 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதோடு பழனி முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வந்துள்ளார்.படுகாயம் அடைந்த கண்ணன் மீட்கப்பட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து கட்டிட உரிமையாளர் மற்றும் வாடைக்கு கடை வைத்திருந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும், இதுபோன்ற பழங்கால கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதால் மதுரை மாநகராட்சி 80 ஆண்டு கடந்த பழங்கால கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. பழங்கால கட்டிடங்கள் இடிக்காமல் உள்ள நிலையில் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!