Home செய்திகள் பேர்ணாம்பட்டு அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது .

பேர்ணாம்பட்டு அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது .

by mohan

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மசிகம் பகுதியில் நேற்று மதியம் பேரணாம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர் பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் பேரணாம்பட்டு ஓங் குப்பம் ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மணி 22, வாணியம்பாடி ஜின்னா தெரு பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா என்பவரின் மகன் சுவேல் 26, பேரணாம்பட்டு திருவிக நகர் சேரன் தெருவை சேர்ந்த அப்துல்மாலிக் என்பவரின் மகன் இம்ரான் அகமது 22, இவர்கள் 3 பேரும் பேரணாம்பட்டு காமராஜ நகர், திருவிக நகர் , கெங்கையம்மன் கோயில் தெரு, கொத்தப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். அதே போல் இன்று காலை பேரணாம்பட்டு வீ . கோட்டா சாலையில் பேரணாம்பட்டு ராமன் வீதியை சேர்ந்த லிங்கநாதன் என்பவரின் மகன் பரத்குமார் என்பவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரை மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். மேலும் இன்று அதிகாலை பேரணாம்பட்டு அடுத்த வளத்தூர் கூட்டுறவு வேளாண்மை வங்கியில் விடியற்காலை 3 மணி அளவில் வங்கியை உடைத்து திருடுவதற்காக கூட்டு சதித்திட்டம் தீட்டினார். பின்னர் பொதுமக்களின் பிடியில் இருந்து அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அதன் பின்பு பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பேரணாம்பட்டு போலீஸாரிடம் சிக்கி கைதாகினர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 10 சவரன் நகை மற்றும் 2 வீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் வீட்டை உடைத்து திருடியது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது வாணியம்பாடி ஆம்பூர் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே திருட்டு வழக்குகளில் சிறை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் லட்சுமி குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது திருட்டு மிரட்டல், வழிப்பறி , கூட்டுசதி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!