Home செய்திகள் கல்வி உதவித்தொகை குறித்து தென்காசி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..

கல்வி உதவித்தொகை குறித்து தென்காசி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ளார். அதன் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டு முதல் அரசு , அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் , மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2,00,000 / – லிருந்து ரூ .2,50,000 / – ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மாணவ, மாணவியருக்கு இலவச கல்விதிட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் , 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை ( எம்.ஏ. , எம்.காம் , எம்.எஎப்.எஸி , எம்.பில் .. எம்.பி.ஏ. , பி.எச்.டி. , ) பாலிடெக்ளிக் ( டிப்ளமோ மூன்றாண்டு பட்டயப்படிப்பு ) தொழிற்படிப்பு ( மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும் , வேளாண்மை, பொறியியல் , சட்டம் ) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் , மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் புதியதாக விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ .2,50,000 / – ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 83442808395 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி [email protected] மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!