Home செய்திகள் தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.இதில் சிறப்பாக திறன்பட பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு கோப்பைகள் மற்றும் நற்சான்றுகளை மாவட்ட எஸ்.பி வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற செயல்கள் பற்றியும், குற்ற செயல்களை எவ்வாறு விரைவாக செயல்பட்டு கண்டறிவது என்பது பற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குற்றங்களை தடுப்பதற்கும் நடந்த குற்றத்தை விரைவாக கண்டறிவதற்கும் அதிக அளவு CCTV கேமராக்களை அமைத்த கரிவலம் வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் அவர்களுக்கு சிறந்த செயல்படும் அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. குற்றங்களை திறன்பட கண்டறிவதற்காக தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு சிறந்த புலன்விசாரணை அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. காவல் நிலையத்திலும் பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று சிறப்பாக செயல்பட்டதற்காக புளியரை சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் அவர்களுக்கு சிறந்த நிலைய பொறுப்பு அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. மேலும் சம்மன் மற்றும் சாட்சிகள் ஆகியவற்றை திறன்பட நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விரைவாக தீர்ப்பு பெற செய்த செங்கோட்டை காவல் நிலைய முதலாம் நிலை காவலர்கள் சங்கர் மற்றும் முருகன் ஆகியோருக்கு சிறந்த நீதிமன்ற காவலர்கள் என்ற கோப்பையும் வழங்கப்பட்டது.மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக குற்றத்தை திறம்பட கண்டறிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு IUCAW, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், சைபர் கிரைம் மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!