Home செய்திகள் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. கோரிக்கை.

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. கோரிக்கை.

by mohan

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர் கடந்த அம்மா ஆட்சி காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த இடைத்தரகர் இல்லாமல் விவசாயகளிடம் இருந்துநெல் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.தற்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால், விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சோழவந்தான் தொகுதியிலுள்ள தென்கரை, ஊத்துக்குளி, மட்டையான், மலைப்பட்டி, தென்கரை புதூர் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் நெல் விவசாயம் உள்ளது.தற்போது, 1,000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டது. ஆனால், தென்கரையிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை 60 ரூபாய் கேட்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, 60 ரூபாய் கொடுத்தாலும் கூட விவசாயிகளிடம் நெல் ஈரப்பதமாக உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுவதாக விவசாயிகள் மனம் வேதனை அடைந்து வருகின்றனர். ஆனால், இடைத்தரகர்கள் மூலம் வியாபாரியிடம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் பெற்றுக்கொண்டு அந்த நெல் மூட்டைகளை பெற்றுக்கொள்வதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, சோழவந்தானில்விவசாயிகள் நடுரோட்டில் நெல்லைக் கொட்டி தங்களது எதிர்ப்பை காண்பித்து வந்தனர்.ஆகவே, விவசாயிகளிடம் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து இடைத்தரகர் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த மாதம் இதே சோழவந்தான் தொகுதியில் கருப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளிடம நெல் கொள்முதல்செய்யாததால், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்தார்கள் என்று இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதுமட்டுமல்லாமல், கடந்த 28 11 2020 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை கிடைப்பதற்கு தாமதமாகியுள்ளது என்றும் ,கூட்டுறவு சங்கங்களே நெல்லுக்கான தொகையை நேரடியாக பட்டுவாடா செய்யவேண்டும் என்றும், கொள்முதல் செய்வதற்கு தேவையான உபகரணங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் நெல்லுக்கான தொகையை குறைத்து வழங்கப்படுகிறது என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கப்பட்டதை ஏற்கனவே ,அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசுக்கு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!