Home செய்திகள் மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பால் மரணம் – இறுதிவரை சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்.

மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பால் மரணம் – இறுதிவரை சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்.

by mohan

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தானது இன்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.அதனை தொடர்ந்து பேருந்து சுமார் 5 நிமிட பயணத்திற்குள்ளாக குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர் ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென பேருந்தை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு ஸ்டெரிங்கின் மீது விழுத்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த மருத்துவ குழுவினர் ஆறுமுகத்தை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.தொடர்ந்து அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய சம்பவம் பயணிகளிடையே நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர் செய்தியாளரிடம் கூறுகையில்… தொடர்ந்து 20 மணி நேரம் நெடுந்தூர பயணம் பணியாற்றும் நிலை உள்ளது உதாரணத்திற்காக தற்பொழுது இந்த வாகனம் காலையில் மதுரையிலிருந்து கொடைக்கானல் சென்று மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து மதுரையில் இருந்து மீண்டும் கோவை சென்று கோவையிலிருந்து மதுரை வரவேண்டும் இப்படி தொடர்பணி கொடுப்பதால் ஓய்வின்றி வாகனங்களை இயக்க சொல்வது உடல்நிலை குறைவு ஏற்படுவதாகவும் இதனால் மன அழுத்தமும் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் 40 வயதைக் கடந்தவர்கள் கட்டாயமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இலவசமாக முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை ஆறு மாதத்துக்கு ஒரு முறை போக்குவரத்து கழகம் சார்பாக செய்ய வேண்டுமெனவும் மேலும் தொழிலாளர் சட்டம் வகுத்த வழிமுறையில் நேர் அப்படியே வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தொடர் பணிகளை கொடுக்கக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர் ஓட்டுநர் ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என நிர்வாகிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!