Home செய்திகள் தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் புதிதாக 300-CCTV கேமிராக்கள்; 15 நாட்களில் அமைப்பு..

தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் புதிதாக 300-CCTV கேமிராக்கள்; 15 நாட்களில் அமைப்பு..

by mohan

குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்களாக CCTV கேமராக்கள் உள்ளது. அந்த வகையில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் தென்காசி மாவட்டம் முழுவதும் புதிதாக 300-CCTV கேமிராக்கள் 15 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுரையின் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் பொதுமக்கள், நாட்டாமைகள் மற்றும் பெரியவர்களிடம் காவல்துறையினர் CCTV கேமராக்கள் அமைப்பதன் நன்மைகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளான பேருந்து நிலையங்கள்,

மார்க்கெட், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் 15 நாட்களுக்குள் புதிதாக 300 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயகிரியில் அப்பகுதி முக்கிய பிரமுகர்களால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS துவங்கி வைத்து பொதுமக்களிடையே கண்காணிப்பு கேமரா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் போது துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி, காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.மேலும் உங்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் CCTV கேமராக்கள் அமைப்பதாக இருந்தால் காவல்துறை உதவி மையம் – 9385678039 என்ற எண்ணிற்கும் தகவலை தெரியப்படுத்துமாறுபொதுநலன் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!