திமுக அரசைக் கண்டித்து வாடிப்பட்டியில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.ஆர் பி உதயகுமார் அறிக்கை.

கழக அம்மா பேரவை செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியூட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுபெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்கவும், அம்மா மினிகிளிக்கை திமுக அரசு மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்து இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளருக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வாடிப்பட்டியில் நாளை காலை 10.30 மணிக்கு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறதுஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய பெருமக்கள், பொதுமக்கள், தாய்மார்கள் ,இளைஞர்கள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்