இராஜபாளையம் அருகே கள்ளர் அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே சமுசிகாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கள்ளர் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் 1 முதல் 5 வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பற்றி வாளகம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்த பள்ளியில் தண்ணீர் தேங்கி உள்ளது மாணவர்கள் பள்ளி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் அருகே பாழடைந்த பழைய கட்டிடம் உள்ளது இதை அகற்றுவதற்கு அரசு உத்தரவு பெற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை அகற்றாமல் உள்ளது இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகளின் உயிர் மீது அக்கறை கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .மழைநீர் தேங்கி உள்ளதால் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால் உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் மழைநீர் தேங்காத இருக்க பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பெற்றோருடைய கோரிக்கையாக உள்ளது..

செய்தியாளர் வி காளமேகம்