இராஜபாளையத்தில் மத்திய அரசின் தனியார் கொள்கை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எஸ்பிஐ வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தவேண்டும் நடைபெற உள்ள குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மசோதாகொண்டுவரவேண்டும். பெருமுதலாளிகளின் வாராக் கடனை எம்பிஏ முறையாக காரணமாக வசூல் செய்ய வேண்டும் தள்ளுபடி செய்யக் கூடாது என்பன பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கிகள் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்