காட்பாடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதையெடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மாநகர மாவட்ட சார்பில் அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அருகில் மாவட்ட பொருளாளர் மூரத்தி, ஒன்றிய செயலாளர் சுபாஸ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட தலைவர் பிரம்மபுரம் பிரகாசம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் கே., ஆர்.ரவி, முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.பாபு. சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், மற்றும் மகளிர் அணியினர், ரத்தத்தின் ரத்தங்கள் கலந்துகொண்டனர்.