காட்பாடியில் அமமுக சார்பில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாநகர மாவட்ட அம்முக சார்பில் மாநில எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா தலைமையில் ஜெ.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தலைமைக்கழக பேச்சாளர் சதீஷ்குமார், காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ். வடக்கு பகுதி செயலாளர் சக்திவேல், பாலகணேஷ், ஐஸ் வெங்கடேசன், மகளிர் அணிஉமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.