பள்ளப்பட்டியில் கண்மாயில் நீரில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவன் பலி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள கந்தப்ப கோட்டையைச் சேர்ந்த கணேஷ் இவர் பள்ளப்பட்டியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சக்தி தினேஷ் வயது 15. பள்ளப்பட்டியில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை என்பதால் கந்தப்ப கோட்டை அருகே உள்ள அகரம் குளம் கம்மாயில் தனது நண்பர்களோடு சென்று குளித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கண்மாயின் பகுதியில் சென்று நீரில் மூழ்கினார். இதை சற்றும் எதிர்பாராத நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு தனது பெற்றோர்களுக்கு ஓடிச்சென்று தகவல் சொன்னார். இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் லட்சுமி தகவல் கொடுக்கப்பட்டு அவரது தலைமையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜோசப் முன்னிலையில் அவர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சுமார் 3 1/2 மணி நேரம் போராடி கண்மாய் நீரில் மூழ்கிய சக்தி தினேஷ் உடலை மீட்டனர். பள்ளி மாணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி கூறியதாவது: தற்போது மழை காரணமாக குளம் குட்டைகளில் தண்ணீர் கிடக்கிறது இதில் பள்ளி மாணவர் சிறுவர்கள் நீச்சல் தெரியாதவர்கள் அறியாமல் குளம் குட்டைகளில் நீர் நேரங்களில் குளித்து வருகிறார்கள் இதனைப் பெற்றோர்கள் சற்று கவனமாக மழைக்காலம் என்பதால் பிள்ளைகளைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

நிலக்கோட்டை செய்தியாளர் மராஜா