செங்கம் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  கோமதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். காவல் ஆய்வாளர்  கோமதி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில் பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அவலநிலை குறித்தும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றியும் பள்ளி குழந்தைகளுக்கு தெளிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .மேலும்அவசர மற்றும் ஆபத்து நேரங்களில் குழந்தைகள் 1098, 100 போன்ற இலவச எண்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, உடனடியாக தொடர்பு கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.  காவலர் கண்மணி சிவகாமி பள்ளி ஆசிரியர்கள் இளங்கோவன் சத்தியமூர்த்தி சுந்தரவரதன் பள்ளி மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.