வேலூரில் ஆன்லைன் மூலம் திருடப்பட்ட ரூ 78 ஆயிரம் ராணுவ வீரரிடம் ஒப்படைத்த சைபர் க்ரைம் போலீசார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஆனந்த். இவரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ 78 ஆயிரத்து 235 நூதன முறையில் திருடப்பட்டது.இதுகுறித்து வேலூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பணத்தை மீட்டு வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ராணுவ வீரரிடம் ஒப்படைத்தார்.