பசியில்லா தமிழகம் குழுவினரை பாராட்டி மருத்துவ உபகரணங்கள்; தென்காசி காவல்துறையினர் வழங்கினர்..

தென்காசி காவல் துறையினர் பசியில்லா தமிழகம் தன்னார்வ குழுவினரின் சேவைகளை பாராட்டி தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். பசியில்லா தமிழகம் என்ற குழுவினர் தென்காசி மற்றும் தமிழகம் முழுவதும் ஆதரவற்றோரின் உடல்களை காவல் துறையினருடன் சேர்ந்து அடக்கம் செய்தல், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தல், சாலையோரம் திரியும் நபர்களை குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்து காப்பகத்தில் சேர்த்தல், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல், முதியவர்கள், ஏழைகள் போன்றோருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகள் செய்தல், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவை அளித்தல் போன்ற பொது நல சேவைகளை எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி செய்து வருகின்றனர். இந்நிலையில் பசியில்லா தமிழகம் குழுவினரின் பொதுநல சேவைகளை பாராட்டி அவர்களின் ஆம்புலன்ஸ்-க்கு தேவையான ரூ.10000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் இணைந்து வழங்கினர். மருத்துவ உபகரணங்களை வழங்கிய தென்காசி காவல் துறையினருக்கு பசியில்லா தமிழகம் குழுவினர் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..