பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மதுரையில் பத்திரிக்கையாளர்கள் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்க ஆணைப் பிறப்பித்த மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற வகையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்க பொதுச்செயலாளர் காசிலிங்கம் தலைமையிலும் தலைவர் ஜெகந்நாதன் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் சோழவந்தான் வெங்கடேசன் மதுரை தெற்கு பூமிநாதன் மற்றும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டனர் மேலும் கடந்த காலங்களில் பத்திரிக்கை நல வாரியம் அமைத்திட அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க கோரிய மனுவை தாக்கல் செய்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தமைக்காக அரும்பாடுபட்ட சங்கத்தின் சட்ட ஆலோசகர் உயர் நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் காந்தி மூத்த பத்திரிக்கையாளர்கள் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்க துணை செயலாளர் தமிழ்செல்வம் நிர்வாகிகள் குருசாமி மற்றும் அன்புச்சகோதரர் சாமிநாதன் செல்வகுமார் ஜெகன் . கணேஷ் மருதுபாண்டி .ஜெயபால் துளசிதாசன் ஜெயபால் ஜெயகணேஷ் குணா . மணிகண்டன் மற்றும் சகோதர செய்தியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மதுரை மாவட்டம்