தென்பழஞ்சி யில மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.இதில்மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள்.நல அலுவலர். ரவிச்சந்திரன்,சமூக சேவகரும் பிரபல திரைப்பட நடிகருமான ரம்மி சௌந்தர் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தன.மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ்சேகர், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.அமைச்சர் மூர்த்தி மாற்றுதிறனாளிகள் சங்க வளர்ச்சிக்கு 50,ஆயிரம் நிதி உதவி வழங்கி .50 பார்வையற்றவர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறியதாவதுமாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது .முதல்வர் அவர்கள் தனது பொறுப்பிலேயே மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை வைத்துள்ளதால் கூடுதல் கவனம் எடுத்து செய்து வருகின்றார்.மேலும் இதுபோல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது எங்களுக்கு பெரும்பாக்கியம் மட்டுமல்ல எங்களின் கடமையாகும். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறோம்.அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.அவர்களின் சங்க நிதிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கி அவர்கள் எந்த உதவிகள் கேட்டாலும் செய்ய அரசு தயாராக உள்ளது என்பதை இந்த இடத்தில் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அமைச்சா மூர்த்தி கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..