காட்பாடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா -அமைச்சர் பங்கேற்பு.

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில்வேலூர் மாவட்ட அரசு மாற்றுதிறனாளிகள் தினவிழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாற்றுதிறனாளிகளுக்கு 2 சக்கர வாகனங்களை வழங்கினார்.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சரவணன் வரவேற்றார். குருஜீ , மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அலுவலர் காய்த்ரி நன்றி கூறினார்.