காரப்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் முழுபுலம் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் காரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத் தலைமையில் நடைபெற்றதுஇம்முகாம் சிறப்பு அழைப்பாளராக செங்கம் தனி வட்டாட்சியர் ஜெயபிரசாத் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இம்முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்டன. 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடியாக பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டன.இம்முகாமில் 50 மனுக்கள் பெறப்பட்டன. 20 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடியாக 25 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் குறுநில அலுவலர் தனலட்சுமி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் சம்பத் காரப்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதவள்ளி , நாகப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் காரப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஊர் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்