வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் உதவி வழங்கும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கடனுதவி வழங்கும் விழா வங்கி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், செங்கம் வேளாண்மை மொத்த கூட்டுறவு வங்கி விற்பனை சங்க தலைவர் முருகன், செ.நாச்சிபட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துகொண்டு 184 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் ,நகைக் கடன், பயிர் கடன் ,மத்திய கால கடன், மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனுதவி என 1.73 கோடி கடன் உதவி வழங்கினார் அப்போது அவர் பேசுகையில் கடனை உரிய காலத்தில் செலுத்தி தொடர்ந்து மாவட்ட அளவில் முதன்மை பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். கிராமப்புறங்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அரசின் வழிமுறையை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைபிடிக்கவேண்டும் முக கவசம் அணிந்து என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார் நிகழ்வில் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்