தென்காசி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் CCTV கேமராக்கள் அமைப்பு..

குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல் துறையின் மூன்றாம் கண்களாக CCTV கேமராக்கள் விளங்குகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் முழுவதும் 10 நாட்களில் 140 – CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுரையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் பொதுமக்கள், நாட்டாமைகள் மற்றும் பெரியவர்களிடம் காவல்துறையினர் CCTV கேமராக்கள் அமைப்பதன் நன்மைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளான பேருந்து நிலையங்கள், மார்க்கெட், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்குள் புதிதாக 140 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் CCTV கேமராக்கள் அமைப்பதாக இருந்தால் காவல்துறை உதவி மையம் – 9385678039 என்ற எண்ணிற்கும் தகவல் அளிக்குமாறு பொதுநலன் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்