தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. உலக எய்ட்ஸ் தினம் 1988 முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும், எயிட்ஸ் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், மக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும்.எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும்.

அந்த வகையில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி மையம் சார்பாக உலக எய்ட்ஸ் தின விழா டிசம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இணை இயக்குனர் மருத்துவர் வெங்கட்ரங்கன் தலைமையிலும், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் அகத்தியன் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்வில் ஏ.ஆர்.டி வட்ட அதிகாரி மருத்துவர் விஜயகுமார், மரு.ராஜேஷ், மரு.லதா, மரு.மது,மரு.மணிமாலா,செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி,வசந்தி முத்துலட்சுமி மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள், ஏ.ஆர்.டி, நம்பிக்கை மைய பணியாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்தும்,அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இணை இயக்குனர் நலப்பணிகள் பழைய அலுவலகத்தில் வைத்து இணை இயக்குனர் நலப்பணிகள் அறிவுறுத்தலின் படி உலக மாற்றுத் திறனாளிகள் தினமும் கொண்டாடப்பட்டது. சிறப்பு மாற்றுத்திறனாளிகள் நல முகாம் நடைபெற்று அதில் 64 பயனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் அகத்தியன், மருத்துவர் ஜெய்சங்கர், மருத்துவர் முத்துலட்சுமி, மருத்துவர் மது, மருத்துவர் விஜயகுமார், நிர்மல், கோபிகா மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாற்றுத்திறனாளி பயனாளிகள் சுமார் 64 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் வழங்கினார். மருத்துவர் ஜெஸ்லின் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சேவைகள் பற்றி விளக்கி கூறினார். விழாவின் நிறைவில் மருத்துவர் விஜயகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்