பாஜக சார்பில் மனிசங்கிலி ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி (OBC) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் (BJMM) சார்பாக சுரண்டையில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு குறைத்திட வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட தலைவர் மு.ராமராஜா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் OBC மாவட்ட பொதுச் செயலாளர் K.A.ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார். அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநிலச் செயலாளர் N.தேவகுமார் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பார்வையாளர் s.v.அன்புராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பாலகுருநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருள் செல்வன், OBC அணியின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் , OBC அணியின் துணைத்தலைவர் திரு.பிரியா சுப்பிரமணியன் , OBC மாவட்ட செயலாளர் நீலகண்டன் BJMM ன் துணைத்தலைவர் பேச்சிமுத்து, கேபிள் பவுன்ராஜ், சங்கரநாராயணன், பார்வையாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, செல்லத்துரை, அமர்சேவா மாரியப்பன், இளைஞரணி தலைவர் ராஜேஷ் விவசாய அணி வல்லப கணேசன் விஜய் சேகர் ITபிரிவு ரங்கராஜன் மற்றும் சுரண்டை நகரத்தலைவர் அருணாசலம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, மண்டல், அணி, பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கினர். அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாவட்ட தலைவர் வேல்பாண்டி, நன்றி கூறினார்.ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகளையும் BJMM நகரத்தலைவர் கணேசன், OBC ஐயனார் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்