தோப்பூர் பகுதியில் ஆறாக மாறிய சாலை 70 குடும்பத்தினர் தவிப்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இருந்து வன்னியம்பட்டி செல்லக்கூடிய சாலையில் தோப்பூர் உள்ளது இந்த தோப்பூர் பகுதியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த நான்கு தினங்களாக பெய்த மழையின் காரணமாக கண்மாயில் நிறைந்து அதிலிருந்து வெளியேறி கூடிய தண்ணீர் ஆறு போல் சாலையில் ஓடுகிறது தரைப் பாலமும் மூழ்கியதால் பாலத்தை கடந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலைகளில் இருபுறமும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர் .சாலை தண்ணீரில் செல்வதால் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் கல் மணல் வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது..

செய்தியாளர் வி காளமேகம்