மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் மனு.

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில், புதுப்பிக்கப்பட்ட பஸ்நிலையம், திறக்கப்பட்டதும், சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என, மதுரை பெரியார் பஸ்நிலைய அண்ணா வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது:மதுரை பெரியார் பஸ்நிலையத்தில், கடந்த 40 ஆண்டுகளாக பழ வியாபாரம் செய்து வருவதாகவும், இது எங்களுடைய வாழ்வதாரம் ஆகும்.மேலும், தலைசுமையாக வியாபாரம் செய்வதால், எவ்வித இடையூறும் ஏற்படாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.இந்த மனுவை சங்க நிர்வாகிகளான,ஆர். வேலாயுதம், சுரேஷ், செல்வராஜ் மற்றும் 50-க்கு மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டு, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயனிடம் வழங்கினர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்