மதுரை -பைக்காரா அரசினர் காலனியின் அவலநிலை.

பாதாள சாக்கடை இணைப்புகளையும், மழைநீர் வடிகால் அமைப்பையும் முறையாக அமைக்காமலும் சரியாக பராமரிக்கப்படாததாலும் ஏற்பட்ட அவலம்.சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு முறையாக அமைக்கப் படாததால் அனைத்தும் இடிந்து அங்கு குடியிருப்புவாசிகளுக்கும் குழந்தைகளுக்கும் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் இடிந்து மோசமான நிலையில் இருக்கிறது.முறையாக அதை எங்கும் இணைக்கவில்லை.சுற்றிலும் குடியிருப்புகள் இருக்க பாதாள சாக்கடை பொங்கி எழும்பி ஆறாக ஓடுகிறது.கழிவுநீரின் துர்நாற்றத்தால் குடியிருப்பில் உள்ள அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.குழந்தைகளும் பெரியவர்களும் நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிப்படைந்து வருகின்றனர்.வீட்டு வாசல் படியில் கூட கால் வைக்க முடியாத அவலம்.துர்நாற்றத்தால் வீட்டிற்குள்ளும் குடியிருக்க முடியாத அவலம்.இதில் மிகவும் துயரம் என்னவென்றால் மாநகராட்சி குடிநீர் குழாயில் கூட கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நீராக வருகிறது.அரசினர் காலனியில் குடியிருப்புகளின் சில பகுதிகள் வீடுகளே இல்லாத இடத்திற்கு கூட அனைத்து பகுதிகளிலும் தார்ரோடு நல்ல முறையில் அமைத்துக் கொடுத்த மாநகராட்சி இந்த ஒரு பகுதியை மட்டும் நிராகரித்தது ஏனோ தெரியவில்லை.இந்தப் பகுதி மக்களும் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் எந்த பயனும் இதுவரை எட்டவில்லை.கருணை கூர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அவசரமாக உரிய நடவடிக்கை எடுத்து பைகாரா அரசினர் காலனி குடியிருப்பு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்