உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சந்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி சந்தை பகுதியில் உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான மொத்தம் 462 கடைகள் உள்ளன. இந்நிலையில் கடைகளை ஏலம் விடுவதற்காக மற்றும் அளவீடு செய்வதற்காகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை உத்தரவின் பேரில் சந்தைத் திடலில் உள்ள 462 கடைகளை அளவீடு செய்ய மதுரை அலுவலகத்திலிருந்து அரசு அதிகாரிகள் வந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சந்தை கடையில் உள்ள நவதானிய பலசரக்கு கடை சிறு வியாபாரிகள், நபார்டு வங்கி பூ மார்க்கெட், மற்றும் தேனி சாலையில் உள்ள கடைகள், மற்றும் கமிஷன் காய்கறி கடைகள் சங்கத்தினர் இணைந்து உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் உசிலம்பட்டி ஆணையாளர் கண்ணன், மற்றும் நகர காவல்துறை சார்பு ஆய்வாளர் அருண் குமார்,ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வினோத்குமார் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சந்தை வியாபாரிகள் ஒரு வார கால அவகாசம் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா