பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோரானா தடுப்பூசி முகாம்.

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு மருத்துவமனை மற்றும் டீ கல்லுப்பட்டி மருத்துவமனை இணைந்து இன்று கோரோன தடுப்பூசி முகாம் நடைபெற்றது, இதில் பேரையூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ மகேஷ்குமார், டீ கல்லுப்பட்டி மருத்துவர் முரளிராஜ், பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் தாஜ்நிஜா, ஆகியோர் ஆலோசனையின் பேரில் பேரையூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மூக்கம்மாள், செவிலியர்கள் தீஸ்வரி,சுசிலா, சுகுணா, பிரியா, பேரூராட்சி பணியாளர்கள் ஜவஹர் சாதிக், பாட்சா, அன்சர்தீன், ஜெயக்குமார், கார்த்திக், காமராஜ், கணபதி, கோகிலா, முத்துலட்சுமி, அங்கன்வாடி பணியாளர்கள் மீனா, ஞானபாக்கியம், பொன் சித்ரா, முருகலட்சுமி, ரேவதி,மற்றும் சமூக ஆர்வலர் கவிஞர் எஸ்.முருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இந்த முகாமில் 256 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பேரையூர் முருகன்