சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் வகை பாம்பு மீட்பு..

சங்கரன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கொம்பேறி மூக்கன் வகை பாம்பு மீட்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தீயணைப்புத்துறை வீரர்களால் பாம்பு லாவகமாக மீட்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் லத்திஸ். அவர் தனது இருசக்கர வாகனத்தில் இன்ஜின் பகுதியில் அடிக்கடி சத்தம் வந்துள்ளதால் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு பழுது நீக்குவதற்காக வாகனத்தை விட்டதைத் தொடர்ந்து மெக்கானிக் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்யும் போது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டதால் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தை விசாலமான இடத்திற்கு கொண்டு சென்று அரைமணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை உயிருடன் மீட்டு பாம்பை காட்டுப் பகுதிக்குள் விட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்ததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்