தொடர் மழையால் இடிந்து விழுந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் லட்சுமி தீர்த்தபடி கட்டுகள்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ளே அமைந்துள்ளது லட்சுமி தீர்த்தம் தெப்பக்குளம்.இந்த குளமானது தெய்வானை அம்மன் நீராடுவதற்காக கட்டப்பட்ட குளம் என கூறப்படுகிறது.பொதுவாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்தக் குளத்தில் கை கால்களை அலம்பி விட்டு மூலவரை தரிசிக்க செல்வது வழக்கம்., மேலும் முகத்தில் ஏற்படும் அரும்பாறை பருக்கள் மற்றும் தேமல் உள்ளிட்ட உபாதைகளை போக்குவதற்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இந்த குளத்தில் உப்பு மிளகு வாங்கி சேர்த்தி செய்வது வாடிக்கையான ஒன்று.பல ஆண்டுகளாக லட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச் சுவர்கள் மிகுந்த பலவீனமடைந்து இடியும் தருவாயில் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு இடங்களில் இடிந்து விழுந்துள்ளது.தெப்பக் குளத்தை சுற்றி பொதுமக்கள் தங்கியிருப்பதால் தங்களது வீடுகளும் பாதிப்படையும் என்றும் அருகில் ஆரம்பப் பள்ளியில் செயல்பட்டு வருவதால் மிகுந்த அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.உடனடியாக அறநிலை துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..