செங்கம் அருகே தரை பாலங்கள் மூழ்கடித்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கடித்த வெள்ளத்தால் எண்பதுக்கும் மேற்பட்ட கிராம மலைவாழ் மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ,நம்மியம்பட்டு வீரப்பனூர்கோவிலூர், குட்டக்கரை, கானமலை,பலா மரத்தூர், மேல் சிலம்படி ,புலியூர், தென்மலை அத்திப்பட்டு, கல்லாத்தூர் ,ஊர் கவுண்டனூர் ஆகிய பதினோரு ஊராட்சிகளை உள்ளடக்கியதாகும். இவ் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.பலா மரத்தூர் ,மேல் சிலம்படி, புலியூர், தென்மலை அத்திப்பட்டு ஊராட்சிகள் ஜமுனாமரத்தூர் வட்டத்தை உள்ளடக்கியதாகும்.கல்லாத்தூர், ஊர் கவுண்டனூர் ஊராட்சிகள் செங்கம் வட்டத்தில் உள்ளது.ஜமுனாமரத்தூர் மற்றும் செங்கம் வட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஜமுனா மரத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்வதற்காகவும்  கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கும்  மருத்துவ வசதிகள் பெறுவதற்காக வும் வேளாண் இடுபொருட்களை பெறுவதற்காகவும் காவல் நிலையம் செல்வதற்காகவும் தீயணைப்பு நிலைய வசதி பெறுவதற்காகவும்  மக்களின் இதர அத்தியாவசியத் தேவைகளை ஜமுனாமுத்தூர் மற்றும் செங்கம் நகரில் சென்று பெறுவதற்காகவும் சார்பதிவாளர் அலுவலகம் செல்வதற்காகவும் ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சி, கோலப்பன் ஏரி மற்றும் காவலூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அமிர்தியில் உள்ள வனவியல் பூங்கா மற்றும் மலை கிராமத்தில் உள்ள சுற்றுலா மையங்களை சென்று பார்ப்பதற்கும் ஜமுனா மரத்தூர் முதல் பலா மரத்தூர், கீழ் விளா மூச்சி ,புலியூர் ,மேல்பட்டு வழியாக செங்கம் திருவண்ணாமலை  செல்லும் சாலையை தான் பயன்படுத்த வேண்டும். இச் சாலையின் குறுக்கே கூட்டத்தூர் கிராமத்தின் அருகில் அடப்ப மூட்டு ஆறு , மோட்டுகொள்ளை ஆறு ,மேல் விளா மூச்சி ஆறு, சின்னகூத்தனேரிஆறு உள்ளிட்ட கிளை ஆறுகள் தான்செய்யாற்றின் துவக்கம்.இக்கிளை ஆறுகள் கூட்டாத்தூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கூட்டாற்றில் ஒன்றாக கலந்து கூட்டாறு வழியாகத்தான் காட்டாற்று வெள்ளம் கோயில் கொள்ளை, பன்டிரேவ், ஊர் கவுண்டனூர், கிளையூர், கல்லாத்தூர் கிராமங்களின் வழியாக செல்லும் செய்யாற்றில் சங்கமிக்கிறது . இந்த ஆற்றின் குறுக்கே தான் கல்லாத்தூர் ஊராட்சி துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பநத்தம் அணையும் கட்டப்பட்டுள்ளது. தினந்தோறும் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படும் இச்சாலையில் குறுக்கிடும் கூட்டாற்றின் மேல்உள்ள தரைப்பாலம் வழியாக  மக்களும் வாகனங்களும் பயணிப்பது மிக ஆபத்தான நிலையில் உள்ளது. மலைப்பகுதி என்பதால் எந்த நேரத்தில் எப்பொழுது மழை வரும்  எந்த நேரத்தில் வெள்ளம் வரும் என்று கண்டறிய முடியாத இந்த ஆற்றில் மலைவாழ் மக்கள் அச்சத்துடன்  பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.ஒவ்வொரு முறை பெய்யும் மழையிலும் இவ் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கினால் பல மணி நேரம் பல நாட்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இச்சாலை செங்கம் பரமனந்தல் முதல் ஜமுனாமரத்தூர், வீரப்பனூர் ,நம்மியம்பட்டு ,அமிர்தி சாலையில் இணைக்கும் சாலை ஆகும் . தகவல் தொடர்பு அளிக்கும் உயர் கோபுர வசதி இல்லாத இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் அடுத்தவர்களுக்கு தகவல் சொல்லக் கூடிய அளவில் இல்லாத இந்த ஆற்றைக் கடப்பது இம் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. பன்டிரேவ், ஊர் கவுண்டனூர், கிளையூர் கல்லாத்தூர் உள்ளிட்ட மக்கள் குப்பநத்தம், பரமனந்தல் வழியாக மேல்பட்டு, புலியூர், கூட்டாற்றைக் கடந்து தான் ஜமுனாமரத்தூர் செல்லவேண்டும். இப்பகுதியில் ஒரு உயர் நிலைப்பள்ளி 3 நடுநிலைப்பள்ளி மூன்று துவக்கப் பள்ளி ஆசிரியர்களும் ஜமுனாமரத்தூர் செல்ல இவ்வழியாக த்தான் செல்ல வேண்டும். ஜமுனாமரத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதற்கும் இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும். மேல்பட்டு,புலியூர் மேல் சிலம்படி பலாமரத்தூர் உள்ளிட்ட மக்களும் ஜமுனாமரத்தூர் செல்ல இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும். இப்பகுதியிலுள்ள 8 நடுநிலைப்பள்ளிகள் பத்துதுவக்கப் பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மருத்துவர்கள் செல்லவும் இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும். ஜமுனாமரத்தூர்  உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்பவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்பவர்கள் காவல் நிலையம் செல்பவர்கள்இச் சாலை தான் பயன்படுத்த வேண்டும். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளடக்கிய பலா மரத்தூர் ,புலியூர், கல்லாத்தூர், ஊர் கவுண்டனூர் உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் உள்ள இச் சாலை ரயில் குறுக்கிடும் கூட்டாற்றின்மீது மேம் பாலம் அமைத்தால் மட்டுமே பிரச்சனை தீரும்.இச் சாலையில் உள்ள ஆற்றின் மீது உள்ள தரைப்பாலத்தில் எவ்விதமான தடுப்பு சுவர்களோ,பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் நிறைய விபத்துக்களும் ஏற்படுகின்றது. இரவு நேரங்களில் சாலையும் ஆற்றில் உள்ள வெள்ள நீரும் சமமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது.எனவே பரமனந்தல் முதல் ஜமுனாமரத்தூர் சாலையில் குறுக்கே மேம்பாலம்  அமைத்து தர மலைவாழ் மக்களின் துயரங்களை  போக்க மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.