தெருக்களில் மாடுகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையாளர்:

மதுரை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கும் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சியால் அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.மேலும் ,மதுரை மாநகராட்சியின் சார்பாக புளு கிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அதன்படி ,கடந்த 10 நாட்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 85 மாடுகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.1,20,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.மேலும், தொடர்ந்து சாலைகளில் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு இந்த வார இறுதிக்குள் கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களுடைய சொந்த இடத்தில் வைத்து மாடுகளை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் மாடுகளை திரியவிடும் நபர்களின் மாடுகள் கைப்பற்றப்பட்டு பிறகு மூன்று நாட்களில் உரிமம் எடுக்காத பட்சத்தில் மாடுகள் ஏலவிடப்படும். இதுபோன்று தொடர்ந்து, மாடுகளை சாலையில் திரியவிடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்