கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பாக விருப்ப மனு தாக்கல் துவக்கம்..

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று( 24-11-2021) இராமநாதபுரத்தில் உள்ள கிங் பேலஸ் மினி மஹாலில் கீழக்கரை திமுக நகர் செயலாளர் SAH.பசீர் அகமது மற்றும் இளைஞரணி பொறுப்பாளர் ஹமீது சுல்தான் முன்னிலையில் விருப்ப மனு பெறப்பட்டது.

இதில் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த நசுரூதீன் மற்றும் மீரான் அலி ஆகியோர் போட்டியிடும் விருப்ப மனு அளித்தனர்.

அதே போல் கீழக்கரை 15வது வார்டு பகுதியில் போட்டியிட கீழக்கரை திமுக தொழில்நுட்ப பிரிவை சார்ந்த SKV சுஐபு தன் விருப்ப மனுவை தாக்கல் செய்தார..