நெல்லையில் பொதுமக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் புதிய வார்டு மறு வரையறையை ரத்து செய்யவும், வார்டுகளில்‌ வாக்காளர்களை பாரபட்சமாக அதிகரித்ததை மீண்டும் குறைத்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முன்பு போல் மேலப்பாளையம் ஊருக்குள் 10 வார்டுகளும் ஊருக்கு வெளியே 4 வார்டுகள் என‌ மொத்தம் 14 வார்டுகள் மண்டலத்தில் அமைத்திட தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மேலப்பாளையம் அனைத்து கட்சிகள் அனைத்து அமைப்புகள் அனைத்து ஜமாஅத் சார்பில் 22.11.2021 திங்கட்கிழமை மேலப்பாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட கடைகளை முழுமையாக அடைத்து மாலை சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லிம் லீக் பகுதி தலைவர் ஆப்ஷா முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், விசிக ‌மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.அப்துல் காதர், அதிமுக பகுதி செயலாளர் ஹயாத்,தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் த.அ உமர்,தமுமுக மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் பொறுப்பாளர் இம்தியாஸ், மஜ்லிஸ் உலமா செயலாளர் ஆஷிக் இலாஹி, அனைத்து சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு பொருளாளர் இஸ்மாயில், குர்ஆன் சுன்னா மஸ்ஜித் கூட்டமைப்பு ஹூசைன் மன்பஈ,மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் பரக்கத்துல்லா, அனைத்து வணிகர் கூட்டமைப்பு செயலாளர் கமரி ஓவியர், மேலப்பாளையம் நுகர்வோர் சங்க செயலாளர் முத்தலிப், சசோ அமைப்பு நிர்வாகி குதுபுன்நஜீப் ,மதிமுக DMK ஜமால்,விசிக நடராஜன்,அமமுக ரப்பானி ,முஸ்லிம் லீக் மில்லத் காஜா,ரய்யான் அசன் மைதின்,தக்வா ஜமாத் அன்வர்,SDPI மின்னத்துல்லாஹ், தவாக மீரான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..