இராஜபாளையம் நகராட்சித் வார்டுகவுன்சிலர் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல் 67 பேர் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்கு உப்பட்ட 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் 107 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ‘இன்று வருவாய்த்துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது நேர்காணலில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் .மாவட்ட துணை செயலாளர் ராசஅருண் மொழி .நகர செயலாளர் ராமமூர்த்தி .மணிகண்ட ராஜா .மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .இந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்த 107 பேரில் 67 பேர் கலந்துகொண்டனர் .தங்கள் வார்டுகளில் எந்த மாதிரியான பணிகள் செய்வீர்கள் மக்கள் பிரச்சனைகள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என்பது குறித்து நேர்காணலில் அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமசந்திரன் கலந்துரையாடினார் இதில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு வாய்ப்பளித்தாள் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படும் என வாக்குறுதி அளித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்