செங்கத்தில் கராத்தே போட்டி தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கேடயம்வழங்கி பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜப்பான் சீட்டோ ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் அறந்தாங்கியில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செங்கம் கராத்தே பயிற்சி பள்ளியின் செயலாளர் எழில் இசை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ,நகர செயலாளர் சாதிக் பாஷா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காரல்மார்க்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துகொண்டு தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற28 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகையில்; செங்கம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் பங்குகொண்டு வெற்றி பெற்றது பெருமைக்குரியதாகும். மேலும் கராத்தே தலையானது ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளது பல்வேறு சிறைகளில் தமிழக அரசும் மாநில அரசும் வழங்கப்பட்டு வருகின்றது இதனை நம் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்அரசுத் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் . என்று பேசினார்.நிகழ்ச்சியில் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சென்னம்மாள் முருகன் , திமுக மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முல்லை மன்னன் , பாரத் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கவியரசன் கட்சி நிர்வாகிகள் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கராத்தே பயிற்சி பள்ளியின் பொருளாளர் எழில் இசை செங்கத்தில் கராத்தே பயிற்சி பள்ளி பள்ளியில் பயிற்சி பெறும் கராத்தே மாணவர்களின் நலன் கருதி கராத்தே மேட் வழங்கும்படி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றி கொடுத்தார்.