Home செய்திகள் கழிவுநீர் செல்ல சாக்கடை கட்டும் பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் அவசரகதியில் தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி.

கழிவுநீர் செல்ல சாக்கடை கட்டும் பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் அவசரகதியில் தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி.

by mohan

தொடர் மழை பெய்து வருவதால்உடனடியாக வேலை தொடங்கவும் அதுவரை மாற்று ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட நிர்வாகத்திற்குபொதுமக்கள் கோரிக்கைமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் காளியம்மன் கோவில் முதல் நிலையூர் கால்வாய் வரை சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் செல்வதற்காக சாக்கடை கட்டும் பணி தொடங்ககடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து சாக்கடை கட்டும் இடத்தை பார்வையிட்டு சென்றனர்ஆனால் ஏனோ உடனடியாக பணிகள் தொடங்கப்படவில்லை இந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமலும் திடீரென்று நேற்று காலை ஜேசிபி எந்திரம் மூலம் சாக்கடை கட்டும் பணிக்காக சம்பந்தப்பட்ட இடத்தில்பள்ளம் தோண்டப்பட்டதுசமீப காலமாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு சாக்கடை கட்டும் பணி சம்பந்தமாக எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமலும் மாற்று ஏற்பாடு செய்யாமலும் வீடுகளுக்கு முன்பு பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளானார்கள் மேலும் பள்ளம் தோண்டும் போர்வையில் வீடுகளுக்கு முன்பு கீழே கிடந்த பட்டியல். கற்கள் மற்றும் உடை. கற்கள் போன்றவற்றை டிராக்டர் மூலம் ஏற்றிச் சென்று வெளியிடங்களுக்கு கொண்டு சென்றது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியதுஇது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் இடம் போன் மூலம் தெரிவித்தும் நேற்று மாலை வரை வேலை நடக்கும் இடத்திற்கு வார்டு உறுப்பினர்கள் யாரும் வரவில்லை மேலும் நேற்று மாலை நேரில் சென்று வார்டு உறுப்பினரிடம்தகவல் தெரிவித்த பின்பு அவர் இந்த வேலை நடப்பது எனக்கு தெரியாது என்றும் நாளை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வரும்போது இதுகுறித்து தான் பேசப் போவதாகவும் கூறினார்மேலும் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் போன் மூலம் தகவல் தெரிவித்த பின்பு நாளை காலை வந்து பார்ப்பதாக அலுவலகத்திலிருந்து கூறினார்கள்தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களால் கழிவுநீர் கால்வாய் செல்லும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் தங்களின் வீடுகளுக்குள் செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போதுஜேசிபி எந்திரம் மூலம் வேலையை தொடங்கும்போது மழைக்காலம் என்பதால் மழைக்காலம் முடிந்தவுடன் வேலையை தொடங்கு மாறு எவ்வளவோ முறையிட்டும் அதனை அவர்கள் கேட்கவில்லை என்றும் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பழமையான கட்டிடங்கள் அருகில் இருப்பதால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாகவும் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள்வீட்டுக்குள் புகும் சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்மேலும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள உடை கற்கள் மற்றும் பாறைக் கற்களை டிராக்டர் மூலம் எடுத்துச் சென்றவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!