Home செய்திகள் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு .

விபத்தில்லா தீபாவளி கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு .

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறை மீட்பு பணியாளர்கள் உள்ளடங்கிய குழுவினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். எனவே அப்போது தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் குழுவினர் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளிடம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடையினை அணிய வேண்டும். தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். வாளி நிறைய தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே திறந்த மைதானத்தில் வைத்து வெடிக்க செய்ய வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை குழந்தைகள் நின்ற நிலையில் வெடிக்க செய்ய வேண்டும். கம்பி மத்தாப்புகளை பயன்படுத்தியபின் நீர் நிரம்பிய வாளியில் போட வேண்டும்.வெடிக்காத பட்டாசுகள் மீது குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பட்டாசு வெடிக்க கூடாது. ஈரமான பட்டாசுகளை சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும். குறைந்த ஓசை (120 டெசிபெல்) கொண்ட பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசுகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை அருகே வெடிக்க செய்யக்கூடாது. சட்டைப்பையில் பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டில் மற்றும் டின் பாட்டிலில் வைத்து வெடிக்க செய்யக்கூடாது. தீக்காயத்திற்கு மை, வாழைச்சாறு, கிரீஸ், எண்ணெய் போன்ற எவ்விதமான திரவங்களையும் பயன்படுத்தக்கூடாது. ஈரமான பட்டாசுகளை எரிவாயு அடுப்பு மற்றும் விறகு அடுப்பு அருகே உலர வைக்கக் கூடாது. பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக்கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க செய்யக்கூடாது. அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றனர். மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கி வருகின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!