பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 -வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு .

இராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.மேலும், மேற்படி தேவர் ஜெயந்தி விழாவில் , கலந்துகொள்ள இருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும் ,அதை கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் இடத்தில் ஒட்ட வேண்டும்.அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும்.தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை மாநகர் வழியாக வந்து ராமநாதபுரம் சுற்றுச் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மேலூர், ஒத்தக்கடை ராம்நாடு ரோடு நான்கு வழி சாலை வழியாக பசும்பொன் செல்லவும் அல்லது மேலூர் ,சிவகங்கை ரோடு வழியாக பசும்பொன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாயல்குடி கோவிலாங்குளம் அல்லது அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்லவேண்டும்.திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி அல்லது தூத்துக்குடி சூரங்குடி சாயல்குடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்:மதுரையில் இருந்து கிளம்பும் வாகனங்கள் மற்றும் மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் வரிசியூர், பூவந்தி வழியாகவும், பழைய சிலைமான் ரோடு வழியாகவும், நெடுங்குளம் வழியாகவும் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் திருவாதவூர் வழியாக வாகனங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்பாஸ்கரன் தெரிவித்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..