காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம். வாரியார்
வேலூர்