தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொண்டு மனுதாரருக்கு பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 25.10.2021 திங்கள் கிழமை நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா நேரில் சென்று மனுக்களைபெற்றுக் கொண்டு கோரிக்கையினை கனிவுடன் கேட்டுக் கொண்டார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா,முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை,தனிநபர் கடன், விதவை உதவித் தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 418 மனுக்கள் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்களை தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறுசம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.ஷீலா, உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்